×
Saravana Stores

இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதல்; லெபனான் நாடாளுமன்ற பகுதியில் குண்டுவீச்சு: உயிரிழப்பு குறித்து அச்சம்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் முக்கிய இடங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம், நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர் அலுவலகம், பல நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் பெய்ரூட்டின் ஜூக் அல்-பிளாட் பகுதியில், இஸ்ரேலின் இரண்டு ஏவுகணைகள் விழுந்ததாக லெபனானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் ஆம்புலன்ஸ் சைரன்கள் எதிரொலித்தன. ஆனால் அதிகாரபூர்வ உயிரிழப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் இடங்களை இஸ்ரேல் படைகள் தாக்கி வரும் நிலையில், தற்போது மத்திய பெய்ரூட்டை இஸ்ரேல் தாக்கியுள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை ராஸ் அல்-நபா பகுதியில் நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தி தொடர்பாளர் மொஹமட் அஃபிப் மற்றும் ஒரு பெண் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பெய்ரூட்டின் முக்கிய இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

The post இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதல்; லெபனான் நாடாளுமன்ற பகுதியில் குண்டுவீச்சு: உயிரிழப்பு குறித்து அச்சம் appeared first on Dinakaran.

Tags : Lebanese parliament ,Beirut ,United Nations Office ,Parliament Building ,Prime Minister's Office ,Lebanon ,Jug al-Flat ,Dinakaran ,
× RELATED லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையம் அருகே வான்வழி தாக்குதல்