சென்னை: நவ.23ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழ்நாடு அரசுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வசதியாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வருவாய் நிர்வாக ஆணையர், மீன்வளத்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு துறைகளுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம் அனுப்பியுள்ளது.
The post தமிழ்நாடு அரசுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம்!! appeared first on Dinakaran.