டெல்லி அருகே புகையுடன் கூடிய அடர்ந்த பனி மூட்டத்தால் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் மோதி விபத்து

டெல்லி: டெல்லி அருகே புகையுடன் கூடிய அடர்ந்த பனி மூட்டத்தால் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. லாரி நிற்பது தெரியாமல் லாரி மீது கார் மோதியது. பின்னல் வந்த கார்களும் அடுத்தடுத்து மோதியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு பெரும் சவாலாக இருந்து வருகிறது. டெல்லியில் நேற்று காற்றின் தரம் 484 புள்ளிகள் பதிவாகி ‘கடுமையான பிளஸ்’ பிரிவுக்கு சென்றுள்ளது. காற்றின் தரம் 300 மற்றும் 400க்கு இடையில் வரும்போது, காற்றுதர மேம்பாட்டு செயல்திட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டது

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை அனைத்து பள்ளிகளையும் மூடி அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள்நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து டெல்லிக்குள் லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசியமற்ற பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தவிர இலகு ரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து வித கட்டுமான பணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

குளிர்காலம் மற்றும் மூடுபனி காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக லக்னோ-ஆக்ரா நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட லாரி மீது பின்னே வந்த கார்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதியது. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருந்தாலும் காரில் பயணித்த ஒரு சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post டெல்லி அருகே புகையுடன் கூடிய அடர்ந்த பனி மூட்டத்தால் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: