×
Saravana Stores

பழநி மலைக்கோயில் ரோப்கார் பெட்டியில் கற்கள் வைத்து சோதனை ஓட்டம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

பழநி: வருடாந்திர பராமரிப்பு பணியில் பழநி கோயில் ரோப்கார் பெட்டியில் கற்கள் வைத்து பொருத்தி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்காக தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்கார், மேற்கு கிரிவீதியில் இருந்து வின்ச் இயக்கப்படுகிறது. இதில் ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடம். 1 மணி நேரத்தில் சுமார் 450 பேர் பயணிக்கலாம். இந்த ரோப்கார் கடந்த அக். 7ம் தேதி முதல் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது.

ரோப்காரில் ரூ.7 லட்சம் மதிப்பிலான இரும்புக்கயிறு மாற்றப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஷாப்ட் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ரோப்காரில் பெட்டிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. தொடர்ந்து கடந்த 16ம் தேதி ரோப்கார் பெட்டியில் பஞ்சாமிர்த பெட்டிகள் அடுக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நேற்று ரோப்கார் பெட்டியில் கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடத்தினர். வல்லுநர் குழுவின் ஒப்புதலுக்கு பிறகு விரைவில் ரோப்கார் மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமென கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post பழநி மலைக்கோயில் ரோப்கார் பெட்டியில் கற்கள் வைத்து சோதனை ஓட்டம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.

Tags : Palani hill ,Palani ,Dindigul District ,Palani Dandayuthapani Swamy Temple Devotees ,South Krivedi ,West Krivedi ,
× RELATED பழநி கந்தசஷ்டி விழா நவ. 2ல் துவங்குகிறது : 7ம் தேதி சூரசம்ஹாரம்