சென்னை: சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மருத்துவர் பாலாஜி வீடு திரும்பினார். கடந்த வாரம் விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தியதில் அரசு மருத்துவர் பாலாஜி காயமடைந்தார். மருத்துவர் பாலாஜி சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.