மயிலாடுதுறை பகுதியில் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை

 

மயிலாடுதுறை,நவ.19: மயிலாடுதுறை நேற்று முன்தினம் இரவு 3 மணி நேரமாக பலத்த மழை பெய்தது. நள்ளிரவு முதலே பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து தற்போது மயிலாடுதுறை, மணல்மேடு, பாலக்குடி, நீடூர், செம்பனார்கோயில், குத்தாலம், மங்கநல்லூர், பாலையூர், எலந்தகுடி, மண்ணமந்தல், தருமபுரம், பெரம்பூர், தரங்கம்பாடி தாலுகாவின் சுற்றுவட்டார பகுதிகளான செம்பனார்கோவில், பொறையார், திருக்கடையூர், திருவிளையாட்டம், சங்கரன்பந்தல், ஆக்கூர், காட்டுச்சேரி, மாணிக்கபங்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
நேற்று காலை 6 மணி மதியம் 12.30 மணி நிலவரப்படி மயிலாடுதுறையில் 42 மில்லி மீட்டர் மழையும், சீர்காழியில் 2.40 மில்லி மீட்டர், மணல்மேடு 2 மில்லி மீட்டர, செம்பனார்கோவிலில் 64.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக தரங்கம்பாடியில் 13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் மழை விட்டுவிட்ட பெய்யத்தொடங்கியது. இடைவிடாது தொடர்ந்து மழைபெய்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டுவெளியேற முடியாத சூழல் ஏற்பட்டதால் வீடுகளிலேயே மக்கள் முடங்கியுள்ளது.. தொடர்ந்து இடைவிடாது பெய்துவரும் மழையால் தாளடி சம்பா பயிர்கள் நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆறு மற்றும் வாய்க்கால்களில் தூர்வராமல் விளைநிலங்களில் சூழ்ந்த இந்த மழை நீடித்தால் சம்பா நடவு பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post மயிலாடுதுறை பகுதியில் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை appeared first on Dinakaran.

Related Stories: