அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சியினர் கைது

அம்பை நவ.19: கல்லிடைக்குறிச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் 7 பேரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூரில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மகனும், இமக இளைஞரணி நிர்வாகியுமான ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதைக்கண்டித்து கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் அருகே இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட செயலாளர் செல்வகுமார், தென்மண்டலத்தலைவர் ராஜ பாண்டியன், மாநில துணைத்தலைவர் முருகானந்தம், சேரன்மகாதேவி ஒன்றியச்செயலாளர் சோடா மணி, கண்ணன், சங்கர், மாரியப்பன் ஆகிய 7 பேரை கல்லிடைக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

The post அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சியினர் கைது appeared first on Dinakaran.

Related Stories: