சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாத முதல் நிதிக்குழுக் காலத்தில், வருமான வரி மூலமாக 15.25 சதவீத வரிப் பகிர்வும், ஒன்றிய கலால் வரி மூலமாக 16.44 சதவீத வரிப் பகிர்வும் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது. இந்த நிதிப் பகிர்வு, 10வது நிதிக் குழுக் காலத்தில் 6.637 சதவீதமாகவும், 11வது நிதிக் குழுக் காலத்தில் 5.385 சதவீதமாகவும், 12வது நிதிக் குழுக் காலத்தில் 5.305 சதவீதமாகவும், 13வது நிதிக் குழுக் காலத்தில் 4.969 சதவீதமாகவும், தற்போது 4.079 சதவீதமாகவும் குறைந்துவிட்டது. தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய வரிப் பகிர்வு மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதித் துறை அதிகாரிகளுடனும், நிதி வல்லுநர்களுடனும் கலந்து ஆலோசித்து, தமிழ்நாட்டிற்கான வரிப் பகிர்வை அதிகமாக பெறுவதற்கான வழிமுறைகளை 16வது நிதிக் குழுவிடம் எடுத்துரைத்து, 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக வரிப் பகிர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post சென்னை வந்த ஒன்றிய நிதிக்குழுவிடம் தமிழகத்திற்கு அதிக வரி பகிர்வு கிடைக்க வலியுறுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை appeared first on Dinakaran.