இதனை தொடர்ந்து, சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் துரித உணவகத்தில் வழங்கப்பட்ட சிக்கனில் துர்நாற்றம் வீசியதாக தற்போது புகார் எழுந்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே கேஎப்சி உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் பெருமாட்டுநல்லூர் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் கிரிஸ்பி சிக்கன் மற்றும் சிக்கன் பர்கர் உள்ளிட்டவற்றை சுமார் 929 ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார். வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளார் அப்போது அவர் வாங்கிச்சென்ற கிரிஸ்பி சிக்கனில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. சிக்கன் சரியாக வேகாத நிலையிலும், சிக்கனில் எலும்பை கடித்தபோது அதில் கெட்ட வாடை வீசிய நிலையில் ரத்தம் உறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அந்த சிக்கனை கேஎப்சி உணவகத்தின் கவுன்ட்டர் அருகே கொண்டு சென்ற கோபிநாத், கடை ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கடை ஊழியர்கள் காசு கொடுத்து விடுவதாக சொன்னார்கள். ஆனால் கோபிநாத், ‘‘சிக்கன் வேகவில்லை என்றால் பச்சைக்கறியை அப்படியே கொடுப்பீங்களா? காசு கொடுத்து நோய் வாங்க கூடாது, சிக்கனின் எலும்பை உடைத்தால் ரத்தம் வருகிறது. காசு போட்டு சிக்கன் வாங்கினால் இப்படித்தான் கொடுப்பீர்களா?’’ என வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு கேஎப்சி ஊழியர், ‘‘ஏதோ ஒன்று இரண்டு அப்படி இருந்திருக்கும். இனிமேல் தவறு நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறோம்’’ என்றார். இதனை ஏற்றுக் கொள்ளாத அவர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனிடையே இச் சம்பவம் சமூகவலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகின்றன.
The post கிளாம்பாக்கம் கேஎப்சி-யின் சிக்கன் பச்ச கறி, எலும்பை உடைத்தால் ரத்தம்: வாடிக்கையாளர் அதிர்ச்சி புகார் appeared first on Dinakaran.