இதன் காரணமாக நடை திறக்கும் போது நெரிசல் அதிகரித்தது. இதனால் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரத்திலும் பக்தர்களை 18ம் படி ஏற அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு வரும் பக்தர்கள் கோயிலின் வடக்கு நடையில் காத்திருக்க வேண்டும். நடை திறந்தவுடன் இந்த பக்தர்கள் தரிசனத்திற்காக முதலில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ஆகியோருக்கும் தரிசனத்திற்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவர்கள் 18ம் படி ஏறியவுடன் நடைபாலத்தில் செல்லாமல் நேராக தரிசனம் செய்யலாம். இதற்கிடையே சபரிமலை சன்னிதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
* 18ம் படியில் பக்தர்களை விரைந்து ஏற்ற போலீசாருக்கு புதிய வசதி
சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் 18ம் படி ஏறிச் செல்வதை புனிதமாக கருதுகின்றனர். சிரமமின்றி பக்தர்களை பிடித்து ஏற்றுவதற்காக 18ம் படியில் போலீசாருக்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 18ம் படியின் இருபுறங்களிலும் போலீசார் அமர்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ தங்களது இரு கைகளாலும் பிடித்து பக்தர்களை ஏற்ற முடியும். இதற்காக இரும்பாலான சிறிய பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது போலீசாரால் பக்தர்களை 18ம் படியில் விரைந்து ஏற்ற முடிகிறது. தற்போது ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்களுக்கு மேல் 18ம் படி ஏறிச் செல்கின்றனர். சபரிமலை தந்திரியின் சிறப்பு அனுமதியின் பேரில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* பஸ் கவிழ்ந்து 5 பேர் காயம்
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 30 பக்தர்கள் வந்த பஸ் அட்டிவளைவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக எருமேலியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
The post சபரிமலையில் நடை சாத்தப்பட்ட பிறகும் 18ம் படி ஏற அனுமதி: குழந்தைகள், பெண்களுக்கு தனி வரிசை appeared first on Dinakaran.