துளித் துளியாய்…

* இங்கேதான் நடத்துவோம்! பிசிபி பிடிவாதம்
பாக். கிரிக்கெட் வாரிய (பிசிசி) தலைவர் மோஷின் நக்வி நிருபர்களை நேற்று சந்தித்தார். அப்போது, ‘சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில்தான் நடக்கும். பாக்.கின் கவுரவமும், மரியாதையும் எங்களுக்கு முக்கியம். வேறு இடத்தில் போட்டி நடத்த அனுமதிக்க மாட்டோம். இதில் இந்தியாவுக்கு பிரச்னை இருந்தால் எங்களிடம் நேரிடையாக பேசி தீர்வு காணலாம். விரைவில் போட்டி அட்டவணையை ஐசிசி அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

* 5வது டி20 போட்டியை நிறுத்திய மாமழை
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 கிரிக்கெட் தொடரில், 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகித்தது. இதையடுத்து நேற்று நடந்த 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில், முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ், 5 விக்கெட் இழப்புக்கு 44 ரன் எடுத்திருந்தபோது, பெரியளவில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, 3-1 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.

* நெம்பர் 1 வீரர் ஜேனிக் சின்னர்
ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் மோதிய இத்தாலி வீரர் ஜேனிக் சின்னர் (23 வயது), 6-4, 6-3 புள்ளிகளுடன் நேர் செட்களில் வென்றார். இதையடுத்து, டென்னிஸ் வீரர்களுக்கான உலக தர வரிசை பட்டியலிலும் அவர் முதலிடம் பிடித்துள்ளார். அதேசமயம், முன்னாள் நெம்பர் ஒன் வீரரும், அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (37வயது) 7வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

The post துளித் துளியாய்… appeared first on Dinakaran.

Related Stories: