கூட்டம் சேர்ப்பதற்கு புது யுக்தி அதிமுக பொதுக்கூட்டத்திற்கு வந்தால் நாற்காலி இலவசம்: போட்டிப்போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்

அவிநாசி: பொதுக்கூட்டத்திற்கு வந்தால் பிளாஸ்டிக் நாற்காலி இலவசம் என அறிவித்து அதிமுகவினர் கூட்டம் சேர்த்த சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நால் ரோட்டில் அதிமுகவின் 53ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. திருப்பூர் வடக்கு எம்எல்ஏ விஜயகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சரோஜா, பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ ஆகியோர் பேசினர். கூட்டம் சேர்ப்பதற்காக, பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு புதிதாக பிளாஸ்டிக் நாற்காலி தரப்படும் என அறிவிக்கப்பட்டது.

1000 புதிய நாற்காலிகளை வாங்கி கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களை அதில் அமரவும் வைத்திருந்தனர். அப்போது சாரல் மழை பெய்த நிலையில், சிறப்பு விருந்தினர்கள் பேசி முடித்ததும், பொதுமக்கள் அவரவர் அமர்ந்திருந்த நாற்காலிகளை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு சென்றனர். நாற்காலி இலவசமாக கொடுத்த விவரம் தெரியாமல், ரோட்டில் சென்ற பொதுமக்கள், ‘‘இதென்னடா வேடிக்கை. எல்லாரும் ஏன் நாற்காலிகளை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள்?’’ என்று ஆச்சரியமாக பார்த்தனர். வழக்கமாக அரசியல் கட்சி கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, இட்லி, தோசை, சப்பாத்தி, குருமா வழங்கப்படும். இங்கு ஆளுக்கு ஒரு நாற்காலி இலவசமாக வழங்கப்பட்டது பேசு பொருளாகியுள்ளது.

 

The post கூட்டம் சேர்ப்பதற்கு புது யுக்தி அதிமுக பொதுக்கூட்டத்திற்கு வந்தால் நாற்காலி இலவசம்: போட்டிப்போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: