இதனிடையே மீண்டும் இது போன்ற சில்வர் கவர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி உணவு வகைகளை பார்சல் செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடையின் உரிமையாளர் மீது ரூ.10, 000 அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி அவரது கடை உரிமத்தை ரத்து செய்து சீல் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை ஓட்டல்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொட்டலங்கள் கட்டினால் உணவு பாதுகாப்பு துறை சட்டப்படி குற்றமாகும். எனவே ஓட்டல்கள் வைத்திருக்கும் அனைவரும் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி உணவு டீ, காபி உள்ளிட்டவை பொட்டலம் கட்டக் கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
The post சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவை பார்சல் செய்தால் கடைக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.