தைவான் நாட்டு இளம்பெண்ணை கரம் பிடித்த காரைக்குடி வாலிபர்: இந்து முறைப்படி திருமணம்


காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பாதரக்குடி கிரவுன் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். சதீஷ்குமார் தைவானில் ஐ.டி கம்பெனியில் பணியாற்றிய போது அவரது நிறுவனத்தின் அருகே உள்ள நிறுவனத்தில் பணியாற்றிய ஹோ சின் ஹூய் (25) என்பவரை காதலித்துள்ளார். பின்னர் அவர் அமெரிக்கா சென்ற பிறகும் காதல் தொடர்ந்தது. இருவீட்டாரின் சம்மதத்துடன் சதீஷ்குமார், ஹோ சின் ஹூய் திருமணம் இந்து முறைப்படி காரைக்குடியில் நேற்று நடந்தது.

திருமண விழாவில் மணமகளின் பெற்றோர், உறவினர்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்திருந்தனர். வேதமந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க இருவீட்டார் உறவினர்களுடன் திருமணம் நடந்தது. மணமகன் சதீஷ்குமார் கூறுகையில், ‘‘ தைவானில் பணியாற்றிய போது ஹோ சின் ஹூய்யை காதலித்தேன். இருவீட்டிலும் உள்ள பெரியவர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டோம்’’ என்றார். மணமகள் ஹோ சின் ஹூய் கூறுகையில், ‘‘மிகவும் சந்தோஷமாக உள்ளது. பாரம்பரிய பழக்கம், இந்திய கலாச்சாரம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது’’ என்றார்.

The post தைவான் நாட்டு இளம்பெண்ணை கரம் பிடித்த காரைக்குடி வாலிபர்: இந்து முறைப்படி திருமணம் appeared first on Dinakaran.

Related Stories: