அக்னி தீர்த்தம் அருகே நகராட்சி கழிவுநீர் கடலில் கலப்பதை தடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் யானை ராஜேந்திரன் என்பவர் மனு தக்கல் செய்திரிந்தார். அந்த மனுவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு நால் ஒன்றிற்கு லட்சகணக்கான பக்த்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ராமநாதசுவாமி கோயில் பகுதியில் இருந்து அக்னி தீர்த்தம் செல்வதற்கான சாலை மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பக்த்தர்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு உள்ளதாகவும், அக்னி தீர்த்தம் அருகே ராமேஸ்வரம் நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கடலில் கழப்பதாகவும் தெரிவித்தார். புனித நீராடும் அக்னி தீர்த்தம் பகுதியில் கழிவு நீர் கலப்பதால் கடல் நீர் அசுத்தமாவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம் அருகே நகராட்சி கழிவு நீர் கடலில் கலப்பதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அக்னி தீர்த்ததில் இருந்து 500மீ. தொலைவில் தண்ணீரை சுத்திகரிக்கும் பிளாண்டுகள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வழக்கு தொடர்பாக பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post அக்னி தீர்த்தத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில், தண்ணீரை சுத்திகரிக்கும் பிளாண்டுகள் அமைப்பு: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.