- காங்கிரஸ்
- கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் விமான நிலையம்
- அகில இந்திய காங்கிரஸ்
- பொதுச்செயலர்
- கே.சி வேணுகோபால்
- பாலக்காடு, கேரளா
- தின மலர்
கோவை: கோவை ஏர்போர்ட்டில் காங்கிரசார் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அகிலஇந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று இரவு கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இக்கூட்டம் முடிந்த பிறகு இரவில் டெல்லி செல்வதற்காக கார் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். அவரை வழி அனுப்ப, அங்கு காங்கிரஸ் நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்கள், காங்கிரஸ் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு பிரிவினராகவும், ஐஎன்டியுசி மாநில பொதுசெயலாளர் கோவை செல்வன் தலைமையில் இன்னொரு பிரிவினராகவும் நின்றுகொண்டிருந்தனர்.
View this post on Instagram
கே.சி.வேணுகோபாலை வழியனுப்பி விட்டு வெளியே வந்தபோது, மயூரா ஜெயக்குமாரின் கை முட்டி, கோவை செல்வன் உடலில் தவறுதலாக பட்டு விட்டதாம். இதையடுத்து, இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் வந்த சக நிர்வாகிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் அடிக்க முயல்போதுபோல் பாய்ந்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
The post கோவை ஏர்போர்ட்டில் காங்கிரசார் கோஷ்டி மோதல்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.