டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய கைலாஷ் கெலோட் பாஜகாவில் இணைந்தார். ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் கைலாஷ் கெலாட். இவர் டெல்லி அரசின் போக்குவரத்து, சட்டம் மற்றும் வருவாய் துறை அமைச்சராக இருந்தவர். இந்நிலையில் கைலாஷ் கெலோட் நேற்று டெல்லி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு கட்சியில் இருந்தும் விலகினார். இன்று கைலாஷ் கெலோட் பாஜகாவில் இணைந்தார். டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது.
ஒன்றிய அமைச்சர்கள் மனோகர் லால் கட்டார் மற்றும் ஹர்ஷ் மல்ஹோத்ரா, டெல்லி பிரிவு தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் தேசிய ஊடகத் தலைவர் அனில் பலுனி உள்ளிட்டோர் முன்னிலையில் அவர் பாஜகவின் தலைமையகத்தில் இணைந்தார். பாஜகவில் இணைந்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்; இந்த முடிவு யாரோ ஒருவரின் அழுத்தத்தால் ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு என்று சிலர் நினைக்கிறார்கள். நான் இன்று வரை யாருடைய வற்புறுத்தினாலும் எதையும் செய்ததில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் இருந்து ஆம் ஆத்மியில் இருக்கும் எனக்கு ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைவது என்பது எளிமையான முடிவல்ல. அமலாக்கத்துறை, சிபிஐ சோதனைகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு நான் பாஜகவில் இணைந்ததாக ஒரு வாதம் முன்வைக்கப்படுவதை முற்றிலும் மறுக்கிறேன். மாற்றத்தை கொண்டு வரலாம் என்பதற்காகவே நான் ஆம் ஆத்மியில் இணைந்தேன். ஆனால், கொள்கைகளில் இருந்து ஆம் ஆத்மி விலகி விட்டது. இதுவே ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் சேர என்னை தூண்டியது என்று தெரிவித்தார்.
The post ஒரு கதையை கட்டமைக்க முயற்சி செய்கின்றனர்: பாஜகாவில் இணைந்த கைலாஷ் கெலோட் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.