×
Saravana Stores

அமெரிக்காவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படும் 4700 கிலோ எடை கொண்ட ஜிசாட் N2 செயற்கைக்கோள்: கவுண்ட் டவுன் தொடங்கியது!!

பெங்களூரு : இஸ்ரோ தயாரித்துள்ள 4700 கிலோ எடை கொண்ட ஜிசாட் N2 அதிநவீன செயற்கைக்கோள் நாளை அமெரிக்காவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் தகவல் தொடர்பு சேவை மேம்படுத்துவதற்காக ஜிசாட் N2 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. 4700 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அதி நவீன செயற்கைக்கோளை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் அமெரிக்காவில் இருந்து அடுத்த வாரம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் N2 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இஸ்ரோவின் ராக்கெட் மூலம் அதிகபட்சமாக 4,100 கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள்களை மட்டும் விண்ணில் செலுத்த முடியும் என்பதால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் ஜிசாட் N2 செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளில் 32 பீம்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணைய சேவையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிசாட் N2 செயற்கைக் கோள் வர்த்தக முறையில் விண்ணில் செலுத்தப்படுவதால் இந்த திட்டத்திற்கு 500 முதல் 600 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும் இதன் ஆயுட்காலம் 14 ஆண்டுகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜிசாட் N2 அதிநவீன செயற்கைக்கோள் நாளை அமெரிக்காவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், இதற்கான கவுண்ட் டவுன் இன்று காலை தொடங்கியது.

The post அமெரிக்காவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படும் 4700 கிலோ எடை கொண்ட ஜிசாட் N2 செயற்கைக்கோள்: கவுண்ட் டவுன் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : United States ,Bangalore ,ISRO ,New Space India Institute ,Dinakaran ,
× RELATED 4700 கிலோ எடை கொண்ட ஜிசாட் N2 அதிநவீன...