ஆராய்ச்சி மாணவர்களை தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தும் வழிகாட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு உயர் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை

சென்னை: ஆராய்ச்சி மாணவர்களை தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தி மனஉளைச்சளை தரும் வழிகாட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட கூடிய மாநில பல்கலை கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்களை கல்வி பணிகளுக்கு மட்டுமல்லாது தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தபடுவதாக பல்வேறு புகார்கள் வரப்பட்டதை அடுத்து தற்போது உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் கோபால் அனைத்து பதிவாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதன்படி கல்வி பணிகள் தவிர்த்து மற்ற பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய வழிகாட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவை அனைத்து பல்கலை கழகங்களுக்கும் அனுப்பியுள்ளார். பல்கலை கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்கள் உரிய மரியாதையுடன் நடத்தாமல் கல்வி பணிகளை தவிர்த்து வழிகாட்டியின் வீட்டு வேலைகளை செய்ய சொல்லி தனிப்பட்ட வேலைகளில் அவர்களை அவமானப்படுத்துவதாகவும், துன்புறுத்துவதாகவும் அரசின் கவனத்திற்கு பல்வேறு புகார்கள் வரப்பட்டிருப்பதை அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் மாணவர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும்.

ஆராய்ச்சி மாணவர்கள் மோசமாக நடத்தப்படுவதால் ஆராய்ச்சியின் திட்டங்கள் மற்றும் வைவாவை முடிப்பதற்கு பெருமளவில் தொகை செலவிடக்கூடிய நிலை காணப்படுவதாகவும் சுற்றறிக்கையில் உயர்கல்வித்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற புகார்கள் வரப்பெற்றால் வழிகாட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பல்கலை கழகங்களுக்கும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த பல்கலைக்கழகங்கள் வகுக்க வேண்டும் என்றும் அதே போல் ஆராய்ச்சி மாணவர்கள் புகார் அளிப்பதற்கான வசதிகளையும் ஆன்லைன் வழியில் ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடைமுறைகளை வகுக்க அனைத்து பல்கலை கழகங்களுக்கும் சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி உடனடியாக இதனை அமலுக்கு கொண்டுவந்து மாணவர்களிடையே புகார்கள் இருந்தால் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தலும் கொடுக்கப்பட்டுள்ளது.

The post ஆராய்ச்சி மாணவர்களை தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தும் வழிகாட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு உயர் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: