அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு குறித்து கலந்துரையாடல் கூட்டம்

 

ஈரோடு, நவ.18: அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டின் பலன்களும், பாதுகாக்க வேண்டிய அவசியமும் குறித்து கலந்துரையாடல் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் பி.பி.பழனிசாமி தலைமை வகித்தார்.

மா நில துணை தலைவர் சுகந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று அருந்ததியர் மக்களுக்கான 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும், உள் இடஒதுக்கீட்டின் பலன்கள் மற்றும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, உள் இட ஒதுக்கீடு குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ராஜா, பி.லலிதா, வி.ஏ.விஸ்வநாதன், என்.பாலசுப்பிரமணி உள்பட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

The post அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு குறித்து கலந்துரையாடல் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: