ஒட்டன்சத்திரம், நவ. 18: ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் எதிர்புறம் கலைஞர் நூற்றாண்டு காய்கறி மார்க்கெட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.21.25 கோடி செலவில் கடைகள், அலுவலக அறைகள், ஏ.டி.எம், உணவு விடுதி, காத்திருப்பு கூடம், கண்காணிப்பு கேமரா, தங்கும் விடுதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, தரமான தார்சாலை உள்ளிடைவையுடன் கட்டப்பட்டு வருகிறது. மார்க்கெட் வியாபாரிகளிடம் ஆலோசனை பெறப்பட்டு, அவர்களது விருப்பத்திற்கேற்ப இங்கு தரமான முறையில் கட்டுமானப்பணிகள் முடிந்து, விரைவில் கடைகள் அனைத்தும் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.
மேலும் இந்த மார்க்கெட்டில் டூவீலர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனைத்திற்கும் நுழைவு கட்டணம் கிடையாது. விவசாயிகளுக்கு சுங்கவரி இல்லை. வியாபாரிகள் அந்தந்த மாதத்திலேயே வாடகையை செலுத்தும் வசதி, வாகனங்கள் தங்கு தடையின்றி சென்று வர அதிகளவில் சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான பொது ஏலம் வருகின்ற 21ம் தேதி வியாழக்கிழமை காலை 11மணிக்கு நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ள கடை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை ஆணையாளர் ஸ்வேதா தெரிவித்துள்ளார்.
The post ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் கடைகள் நவ.21ல் ஏலம்: நகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.