×
Saravana Stores

திருப்போரூர் – நெம்மேலி சாலையில் முள்செடிகள் அகற்றம்: நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை

 

திருப்போரூர், நவ.18: தினகரன் நாளிதழ் எதிரொலியாக, திருப்போரூர் – நெம்மேலி சாலையில் முள்செடிகள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலையையும், பழைய மாமல்லபுரம் சாலையையும் இணைக்கும் வகையில் திருப்போரூரில் இருந்து நெம்மேலி வரை பக்கிங்காம் கால்வாயில் பாலம் மற்றும் இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையை பொதுமக்கள், மீனவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை மிகவும் குறுகலாக இருப்பதாகவும் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிப்பதாகவும் இவை வாகன ஓட்டிகளிவ் மீது பட்டு விபத்து ஏற்படுவதாக தினகரன் நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, முதல் கட்டமாக உதடு செடிகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையின் இரு புறமும் வளர்ந்துள்ள வேப்ப மரங்கள், புங்கன் மரங்கள் உள்ளிட்ட நிழல் தரும் மரங்களை தவிர்த்து பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ள சீவை கருவேல மரங்களை மட்டும் அகற்றும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இந்த சாலையை இருவழிச் சாலையாக அகலப்படுத்தி தரவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்போரூர் – நெம்மேலி சாலையில் முள்செடிகள் அகற்றம்: நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Nemmeli ,Highways Department ,Dhinakaran ,Tiruporur-Nemmeli road ,Tirupporur ,East Coast Road ,Old Mamallapuram Road ,Tirupporur - Nemmeli Road ,Highway Department ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் அருகே கொட்டமேடு –...