செங்கல்பட்டு, நவ.18: செங்கல்பட்டு அடுத்த தச்சூர் கிராமத்தில் 1740 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் வாகன சோதனையின்போது சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் ரேஷன் அரிசிகள் மூட்டை மூட்டையாக கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறை கூடுதல் இயக்குநர் அருண், ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல் கண்காணிப்பாளர் கீதா மற்றும் சென்னை காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சசிகலா தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் தச்சூர் கிராமம் சின்னப்ப தேவாலயம் பின்புறம் உள்ள சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த வாகனத்தை சோதனையிட்டபோது, அந்த வாக்குவாதத்தில் 60 கிலோ எடை கொண்ட 29 மூட்டைகள் என பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லாமல் இலவசமாக வழங்கக்கூடிய ஆயிரத்து 740 கிலோ ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு தச்சூர் சீவாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வாங்கி வந்து அதை மதுராந்தகம் பகுதியில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் கடத்திய மதுராந்தகம் அத்திவாக்கம் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது மகன் ராஜேஷ் (37) மற்றும் மதுராந்தகம் ஒத்தவாடை பகுதியை சேர்ந்த முத்து என்பவரது மகன் கெஜராஜ் (31) ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 1740 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் சரக்கு வாகனம் கைபற்றப்பற்றி அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post செங்கல்பட்டு அருகே வாகன சோதனையின்போது 1740 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: இருவர் கைது appeared first on Dinakaran.