- ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
- சென்னை
- முதல்வர்
- தெரணி ராஜன்
- ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
- தின மலர்
சென்னை: ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் முக்கியமான மருத்துமனைகளில் ஒன்றாக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை திகழ்கிறது. இந்த மருத்துவமனைக்கு தினசரி 12,000 புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு நோயாளியுடனும் குறைந்தபட்சம் ஒரு உதவியாளரும் வருகிறார்.
இந்த மருத்துவமனையில் உள்நோயாகிகளுக்காக 3,794 படுக்கைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில செவ்வாய்கிழமை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோயியல் நிபுணர் பாலாஜி ஜெகநாத், நோயாளியின் மகனால் கத்தியால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் முழுவதும் சுகாதார நிபுணர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
மேலும் மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் ஆலோசனை நடத்திய மருத்துவ சங்க பிரிதிநிதிகள், அனைத்து மருத்துவமனைகளிலும் மெட்டல் டிடெக்டர் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அனைத்து அரசு மருத்துவமனைகளில் மெட்டல் டிடெக்டர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். அதன்படி, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.
The post ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியது: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.