அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தபோது, போலீசாரை தாக்கியதால், அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர், சிறையில் இருந்து கடந்த 14ம் தேதி இவர்கள் ஜாமீனில் வெளியே வந்து, அதிகாலை 2 மணிக்கு ஓட்டேரி காவல் நிலையம் முன்பு பட்டாசு வெடித்து விட்டு, காவல் நிலையத்தில் இருந்த போலீசாரை கேலி செய்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
காவல் நிலையம் முன்பு பட்டாசு வெடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து ஓட்டேரி சட்டம் ஒழுங்கு முதல் நிலைக் காவலர் குருசாமி கொடுத்த புகாரின் பேரில் நேற்று ஓட்டேரி போலீசார் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், பெலிக்ஸ் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
The post காவல் நிலையத்தில் பட்டாசு வெடித்த வழக்கறிஞர் உள்பட 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.