இன்னொரு இ.டி ரெய்டு நடந்தால் அதிமுக பாஜவுடன் இணைந்துவிடும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை சுங்கச்சாவடி தங்கம் மாளிகை திருமண மண்டபத்தில், சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற எளியோர் எழுச்சி நாள் விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 48 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைத்து வாழ்த்தி, சீர்வரிசை பொருட்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: திமுக அரசின் சாதனைகளை இங்கே வந்திருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீடாக ஏறி இறங்குங்கள்.

இலக்கு 200 என்பதை மனதில் ஏந்தி, ஒவ்வொரு வாக்காளரையும், தேர்தலுக்கு முன்பாக 4 அல்லது 5 முறையாவது சந்தித்து நமது திட்டங்கள் குறித்து பேச வேண்டும். அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியம். 7வது முறையாக திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்க அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்னொரு இ.டி ரெய்டு நடந்தால் அதிமுக பாஜவுடன் இணைந்துவிடும்.

இங்கே இல்வாழ்வில் இணைகின்ற 48 இணையர்களுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சுயமரியாதையுடன் வாழ வேண்டும். உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைக்கு அழகு தமிழில் பெயர் சூட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், உள்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post இன்னொரு இ.டி ரெய்டு நடந்தால் அதிமுக பாஜவுடன் இணைந்துவிடும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: