மாசுபட்ட நகரங்களில் டெல்லிக்கு 2வது இடம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

புதுடெல்லி: டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்து நாட்டின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் டெல்லி 2வது இடத்தில் உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காற்று மாசின் காரணமாக கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. சுரங்கம் தொடர்பான செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டு 5 ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின் படி நேற்று மாலை 4 மணி வரையிலான 24 மணி நிலவரப்படி டெல்லியில் காற்று மாசு தரக்குறியீடு(ஏக்யூஐ) 441 என்ற நிலையை எட்டியுள்ளது. இது மிகவும் அபாய கட்டத்தில் இருக்கிறது. இதனால் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு பல சுகாதார பிரச்னைகள் ஏற்படும்.நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். நாட்டிலேயே அரியானாவின் பகதூர்கார் நகரம்( ஏக்யூஐ 445) முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தாற்போல் டெல்லி(ஏக்யூஐ441),அரியானாவின் பிவானி(ஏக்யூஐ415),ராஜஸ்தானின் பிகானீர்(ஏக்யூஐ404) நகரங்கள் முறையே 2,3வது இடத்தில் உள்ளன.

 

The post மாசுபட்ட நகரங்களில் டெல்லிக்கு 2வது இடம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: