×
Saravana Stores

குளித்தலை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜைக்கு மூர்த்தக்கால் நடும் விழா

 

குளித்தலை, நவ. 17: கரூர் மாவட்டம் குளித்தலை ஆண்டார் மெயின் ரோட்டில் உள்ள சுவாமி ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாதம் மண்டல பூஜை விழாவினை ஒட்டி முகூர்த்தக்கால் நடுவிழா நடைபெற்றது. இவ்விழாவினை தொடர்ந்து நேற்று சுவாமி ஐயப்பனுக்கு பால் தயிர் இளநீர் மஞ்சள் சந்தனம், பழ வகைகள், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மண்டல பூஜை க்கான முகர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

இதில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவினைத் தொடர்ந்துவாராந்திர பஜனை விழா முதல் வாரம் நவம்பர் 23ஆம் தேதி இரண்டாவது வாரம் 30ம் தேதி மூன்றாவது வாரம் டிசம்பர் 7ம் தேதி நான்காவது வாரம் டிசம்பர் 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும். இதில் ஐயப்ப பக்தர்கள் குருசாமிகள் ஆன்மிக அன்பர்கள் திரளாக கலந்துகொள்கின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சுவாமி ஐயப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்கின்றனர்.

The post குளித்தலை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜைக்கு மூர்த்தக்கால் நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Murthakal ,Mandal Pooja ,Kulithalai Ayyappan Temple ,Mugurthakal midi ceremony ,Mandal Puja festival ,Karthikai ,Swami Ayyappan Temple ,Andar Main Road, Kulithalai, Karur District ,Swami Ayyappan ,Murthakal planting ,Kulathlai Ayyappan Temple ,
× RELATED பெருமாள் கோயிலில் பால்குட ஊர்வலம்