×
Saravana Stores

‘யாரையும் வெறுக்க வேண்டாம்’, ‘வாழு வாழ விடு’, ‘அன்பை மட்டுமே பகிருங்கள்’ : தனுஷுக்கு அட்வைஸ் செய்த இயக்குநர் விக்னேஷ் சிவன்!

சென்னை : ‘யாரையும் வெறுக்க வேண்டாம்’, ‘வாழு வாழ விடு’, ‘அன்பை மட்டுமே பகிருங்கள்’ என நடிகர் தனுஷ் பேசிய வீடியோவை பகிர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனுஷுக்கு அட்வைஸ் செய்துள்ளார். Nayanthara: Beyond The Fairytale என்ற தன் ஆவணத்திரைப்படம் தொடர்பாக, நடிகர் தனுஷ் குறித்து காட்டமான பதிவை நடிகை நயன்தாரா பதிவிட்டிருந்த நிலையில், விக்னேஷ் சிவனும் இதுத்தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,”நடிகர் தனுஷை பின் தொடரும் தீவிரமான ரசிகர்களை கருத்தில் கொண்டாவது அவரின் போக்கு மாற வேண்டும்.

அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் சந்தோஷப்படும்படி தனுஷின் போக்கு மாறுவதற்கு இறைவனை பிரார்த்திக்கிறேன். ஒருவர் மீது இருக்கும் அன்பு மற்றொருவரின் மீது வெறுப்பாக மாறக்கூடாது. அப்படி மாறினால் அந்த உணர்வுக்கு அர்த்தமே கிடையாது. இன்று உலகம் மோசமான நிலையை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது. அவ்வளவு எதிர்மறையான எண்ணங்கள்… யாருக்கும் யாரும் நன்றாக இருப்பதே பிடிக்கவில்லை.. வாழுங்கள் வாழவிடுங்கள். யாரும் யாரையும் வெறுக்க வேண்டிய அவசியமே கிடையாது. ஒருத்தரை பிடித்திருந்தால் அவரை கொண்டாடுங்கள் இல்லையெனில், விலகிவிடுங்கள். அவ்வளவுதான். இது பெரிய ராஜதந்திரம் கிடையாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ‘யாரையும் வெறுக்க வேண்டாம்’, ‘வாழு வாழ விடு’, ‘அன்பை மட்டுமே பகிருங்கள்’ : தனுஷுக்கு அட்வைஸ் செய்த இயக்குநர் விக்னேஷ் சிவன்! appeared first on Dinakaran.

Tags : VIGNESH SHIVAN ,DHANUSH ,Chennai ,Vignesh Sivan ,Dinakaran ,
× RELATED பழிவாங்குபவர், அடுத்தவர்களின்...