நாகப்பட்டினம்,நவ16: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணியை கட்டி நூதனமான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுப்ரமணியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர்கள் பாலசண்முகம், புஷ்பராஜ், ராமச்சந்திரன், செங்குட்டுவன், புவனேஸ்வரி ஆகியோர் பேசினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணியை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இளவரசி நன்றி கூறினார்.
The post பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.