பின்னர் இந்த வழக்கில் 18 பேர் குற்றவாளிகளாக கருதப்பட்டு, திருபுவனத்தை சேர்ந்த நிசாம் அலி, குறிச்சிமலை பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ், சர்புதீன் முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரை சேர்நத் ஆசாருதீன் என 13 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதில் 2 பேர் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மீதமுள்ள 11 பேர் தொடர்ந்து சிறையில் உள்ளனர்.இதற்கிடையே தலைமறைவாக உள்ள 6 பேர் புகைப்படங்களுடன் தேடப்படும் குற்றவாளியாக என்ஐஏ அறிவித்துள்ளது.
இவர்கள் தொடர்பாக தகவல்கள் அளிக்கும் நபர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது. ஆனால், இதுவரை 6 பேரை என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்ய முடியவில்லை. இதற்கிடையே என்ஐஏ அதிகாரிகள் கடந்த அக்டோபர் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, கொடைக்கானலில் முகமது அலி ஜின்னா என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அவரது பூம்பாறை 3 நட்சத்திர ஓட்டலில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஷாகுல் ஹமீது என்பவருக்கு பல மாதங்கள் அடைக்கலம் கொடுத்து உதவியதற்கான ஆவணங்கள் சிக்கியது. இதை வைத்து என்ஐஏ அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு மேல் தீவிர விசாரணை நடத்தியதில், பூம்பாறை 3 நட்சத்திர ஓட்டல் உரிமையாளரான முகமது அலி ஜின்னா குற்றவாளி என்று தெரிந்தே ஷாகுல் ஹமீதுக்கு அடைக்கலம் மற்றும் உதவிகள் செய்து தப்ப வைத்தது உறுதியானது. அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் கொடைக்கானலில் உள்ள பூம்பாறை 3 நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் முகமது அலி ஜின்னாவை நேற்று கைது செய்தனர்.
The post பாமக நிர்வாகி கொலை வழக்கில் குற்றவாளிக்கு அடைக்கலம் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் கைது: என்ஐஏ அதிரடி appeared first on Dinakaran.