பூக்கள் விலை மேலும் உயர்வு

அண்ணாநகர், நவ.16: கார்த்திகை மாதம் 1 இன்று பிறப்பதை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் ேமலும் உயர்ந்தது. குறிப்பாக, ஒரு கிலோ மல்லி ₹900ல் இருந்து ₹1,200க்கும், ஐஸ் மல்லி ₹800ல் இருந்து ₹1000க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை ₹600ல் இருந்து ₹750க்கும், கனகாம்பரம் ₹1,200ல் இருந்து ₹1500க்கும், அரளி பூ ₹200ல் இருந்து ₹250க்கும், சாமந்தி ₹140ல் இருந்து ₹150க்கும், சம்பங்கி ₹120ல் இருந்து ₹160க்கும், பன்னீர் ரோஸ் ₹100ல் இருந்து ₹120க்கும், சாக்லேட் ரோஸ் ₹150க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘இன்று கார்த்திகை 1 என்பதால் அனைத்து பூக்களின் விலை மேலும் உயர்ந்துள்ளது. அனைத்து பூக்களும் விறுவிறுப்பாக வியாபாரம் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,’’ என்றார்.

The post பூக்கள் விலை மேலும் உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: