அந்த பிரச்னையைத் தீர்க்கிறேன். மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்கள் தீட்டுகிறேன் திட்டங்கள் எப்படி செயல்படுகிறது என்று கள ஆய்வு செய்கிறேன் சொன்னால், சொன்ன நாட்களுக்குள் திட்டங்களை திறந்து வைக்கிறேன். அதனால்தான், இந்த ஸ்டாலின் எங்கு சென்றாலும் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். எங்கள் குறைகளை போக்குவார் என்ற நம்பிக்கையோடு, தேடி வந்து மனுக்களை கொடுக்கிறார்கள். அந்த நம்பிக்கையை, நான் எந்நாளும் காப்பாற்றுவேன் காப்பாற்றுவேன் என்று உறுதிதருகிறேன்.
தமிழ்நாட்டு மக்கள் என்மேலும், திமுக மேலும் வைத்திருக்கும் நம்பிக்கையும், அளவில்லாமல் பொழியும் அன்பும், எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களுக்கு கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொஞ்சம் அல்ல. நிறைய கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எங்களது மக்கள் இன்றைக்கு எப்படியெல்லாம் வரவேற்பு தருகிறார்கள் என்பதை அவர்களும் பார்க்கிறார்கள். எங்கே, மக்கள் தன்னை மறந்துவிடுவார்களோ என்று நினைத்து நாள்தோறும் மீடியாவின் முன்பு தன்னுடைய பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருக்கிறார்.
“2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் சிறந்த ஆட்சியை அதிமுக தந்ததாகவும், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நிறைய திட்டங்களை கொண்டு வந்து, அவர் மறைவிற்கு பிறகு நான்கு ஆண்டு தான் சிறப்பாக ஆட்சி செய்ததாகவும், சிரிக்காமல் பேட்டி கொடுத்திருக்கிறார். பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மையாகி விடாது. இன்னும் பளிச்சென்று அம்பலப்பட்டு போகும். தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு என்று ஒன்றை நடத்தினார் பழனிசாமி. அது உங்களுக்கு தெரியும். ரூ.3லட்சம் கோடி முதலீட்டை, தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து சேர்த்து விட்டேன் என்று பெருமையோடு பேசினார்.
நான் கேட்கிறேன். எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி அவர்களே, நீங்கள் நடத்திய முதலீட்டாளர் மாநாடு மூலமாக எவ்வளவு முதலீடுகள் வந்தது, இதனால் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர், இதையெல்லாம் புள்ளிவிவரத்துடன் உங்களால் சொல்ல முடியுமா? வந்தவர்களையும் விரட்டி விட்டார்கள். ஏன் என்றால், கரப்ஷன், கமிஷன், கலக்ஷன். அந்த ஆட்சிக்கு பயந்து, தமிழ்நாட்டை விட்டு ஓடிச்சென்றவர்கள் பல பேர். நம்முடைய திராவிட மாடல் ஆட்சிதான் திரும்ப அழைத்துக்கொண்டுவந்து தொழில் மறுமலர்ச்சியை இன்றைக்கு ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளில், 31 லட்சம் பேர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறோம். உடனடியாக அவர்களை தொழில் தொடங்க அனைத்துவித முயற்சிகளும் எடுத்துக்கொண்டு இருக்கிறோம். நானே பல திறப்பு விழாக்களுக்கு சென்றுவருகிறேன், கலந்து கொண்டு வருகிறேன், திறந்துவைத்துவிட்டு வருகிறேன். இதுதான் நல்லாட்சியின் அடையாளம். ஆனால், பழனிசாமி ஆட்சியின் நிலைமை என்ன? “எப்போதுதான் முடியும் இந்த ஆட்சி” என்று, தன்மானம் உள்ள ஒவ்வொரு தமிழரும் காத்திருந்த நிலையில் தான் இருந்தது பழனிசாமி ஆட்சி.
ஆனால், திராவிட மாடல் ஆட்சி என்பது, ‘இது எங்களுடைய ஆட்சி, எங்களுக்கான ஆட்சி, எங்கள் வாழ்வை வளம் பெற வைக்கும் ஆட்சி, எந்நாளும் தொடர வேண்டும் திமுக ஆட்சி’ என்று மக்கள் விரும்பும் லட்சிய ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி விளங்குகிறது. கடந்தவாரம் மேற்கு மண்டலம், சில நாட்களுக்கு முன்பு தென் மண்டலம், இன்றைக்கு மத்திய மண்டலம் என்று தமிழ்நாட்டு மக்களாகிய உங்களுடன் இருக்கிறேன். இப்போது மட்டுமல்ல, கிட்டதட்ட 60 ஆண்டுகளாக நான் மக்களோடுதான் இருக்கிறேன். தேர்தலுக்காக வருபவன் அல்ல நான். உங்கள் தேவைகளை அறிந்து, தீர்த்து வைப்பதற்காக எப்போதும் உடனிருப்பவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மறந்துவிடாதீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post பொய்க்கு மேக்கப் போட்டால் அது உண்மையாகி விடாது 4 ஆண்டு சிறப்பாக ஆட்சி நடத்தியதாக சிரிக்காமல் பேட்டி அளிக்கிறார் எடப்பாடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி appeared first on Dinakaran.