நெய்வேலி: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்திய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின்கீழ் இயங்கி வருகிறது. பழுப்பு நிலக்கரியை முதன்மை எரிபொருளாகக் கொண்டு இயங்கக்கூடிய தெற்காசியாவின் முதல் மற்றும் ஒரே அனல்மின் நிலையமான இந்நிறுவனமானது 1962ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம்தேதி அப்போதைய குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தொடங்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. அவ்வப்போது இந்த நிலையம் புதுப்பிக்கப்பட்டு இயங்கி வந்தாலும், ஒரு அனல் மின் நிலையம் 20 ஆண்டுகளுக்குமேல் இயங்கக் கூடாது என வரையறை செய்யப்பட்டு, இந்த அனல் மின் நிலையத்தை மூடுவதற்கு மத்திய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனால் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை, முதலாம் அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி படிப்படியாக நிறுத்தி மூடப்பட்டது. இதையடுத்து, முதலாம் அனல்மின் நிலையத்தை பாதுகாப்பாக அதனை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.
The post என்எல்சியின் முதலாம் அனல்மின் நிலையம் இடிப்பு appeared first on Dinakaran.