அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு கலைஞர் ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளார்.15,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிசெய்யும் காலணி ஆலைக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. காலணி தொழிற்சாலையால் ஜெயங்கொண்டத்தில் பொருளாதார நிலை உயரும்.அரியலூரில் ரூ.3 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும்.வெங்காய உற்பத்தியில் முன்னிலையில் |இருக்கும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய வெங்காய விற்பனை மையம் அமைக்கப்படும்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.4 கோடி செலவில் தீயணைப்பு அலுவலக கட்டடம் கட்டப்படும். 35 சுகாதார நிலையங்களுக்கு சொந்த கட்டடம் கட்டப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் மருதையாற்றில் ரூ.24 கோடி செலவில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். பெரம்பலூரில் வாடகை கட்டடத்தில் இயங்கும் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்படும். அரியலூரில் ரூ.101.5 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும். திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது பழனிசாமிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் தன்னை மறந்துவிடுவார்களே என்று நினைத்து நாள்தோறும் பேட்டி தருகிறார் பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி காலத்தில் கொண்டு வந்த முதலீடுகள் எவ்வளவு என்று கூற முடியுமா?. பொய்க்கு மேக்-அப் போட்டால் அது உண்மையாகி விடாது;பளிச்சென்று அம்பலமாகிவிடும். தேர்தலுக்காக வருபவன் நான் அல்ல, 60 ஆண்டுகளாக மக்களின் தேவையை அறிந்து தீர்த்து வைக்கிறேன்.
3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு ஈர்த்துள்ளோம். தேர்தலுக்காக வருபவன் அல்ல, மக்களின் தேவையை தீர்த்து வைக்க வருகிறேன். தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்க திராவிட மாடல் அரசு பாடுபடுகிறது. திமுக அரசின் முத்தான திட்டங்களில் ஒன்றுதான் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம். விருதுநகர் அன்னை சத்யா காப்பக குழந்தைகளை சந்தித்தது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக மாறிவிட்டது. மிக மிக நலிந்த மக்களுக்கான ஆட்சியாக ஸ்டாலின் ஆட்சி இருக்கும் என்று நினைக்கிறேன். குழந்தைகள் தங்களுக்கு தேவையானதை கேட்க முடியாது, அவர்களுக்கு தேவையானதை அரசே முன்வந்து செய்கிறது. ஒரு குடும்பத்துக்கு தேவையானதை ஒரு தந்தையாக, குடும்பத்தில் ஒருவனாக செய்து தருகிறேன். நானும் என் குடும்பமும் முன்னேற ஸ்டாலின் முக்கிய காரணம் என்று மாணவர்கள் சொல்ல வேண்டும்.திராவிட மாடல் ஆட்சி வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post ஒரு குடும்பத்திற்கு தேவையானதை ஒரு தந்தையாக, குடும்பத்தில் ஒருவனாக செய்து தருகிறேன் : அரியலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.