இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அனுரா திசநாயகேவுக்கு தமிழர்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர். யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மன்னார், வவுனியா உள்ளிட்ட இடங்களில் அனுர திசநாயகே கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 3-ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி ஆளுங்கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அதிபர் திசநாயகேவின் தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அநுர திசநாயகே ஆதரவு அலை நாடு முழுவதும் வீசியுள்ளது. 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 141 இடங்களுக்கு மேல் திசநாயகே கட்சி முன்னிலையில் உள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சி 141 இடங்கள், சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 35 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
The post இலங்கை தேர்தலில் அனுர திசநாயகேவுக்கு தமிழர்கள் ஆதரவு appeared first on Dinakaran.