சென்னை: சென்னையில் உள்ள புழல் ஏரிக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2403 மில்லியன் கன அடியாக உள்ளது. நேற்று 298 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 242 கனஅடியாக சரிந்துள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சோழவரம் ஏரி: 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 115 மில்லியன் கனஅடியாக உள்ளது. நேற்று 69 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 35 கனஅடியாக சரிந்துள்ளது.
கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரி: 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 303 மில்லியன் கனஅடியாக உள்ளது. மீண்டும் 15 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 44.02% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 5.175 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.
The post சென்னையில் உள்ள குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்! appeared first on Dinakaran.