புதுக்கோட்டை, நவ.15: சென்னையில் டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்பணியை புறக்கணித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனைக்குள் புகுந்து அரசு டாக்டர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் டாக்டருக்கு 7 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பத்தை கண்டித்து புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் பணியை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் புதுக்கோட்டை கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட இந்திய மருத்துவ சங்க தலைவர் சுல்தான், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் தனியார் டாக்டர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னையில் டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் அகியவற்றை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
புதுக்கோட்டை அரசு மருதத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் மருத்துவப்பிரிவில் மருத்துவர்கள் பணி செய்யவில்லை. ஆனால் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் செயல்பட்டது. மேலும் புறநோயாளிகள் பிரிவில் டாக்டர்கள் வராததால் சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
The post சென்னை டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.