- இஸ்ரேல்
- சிரியா
- காசா, லெபனான், ஈரான்
- டமாஸ்கஸ்
- ஹமாஸ்
- காசா
- ஹெஸ்பொல்லா
- லெபனான்
- ஈரான்
- இஸ்லாமிய ஜிஹாத்
- காசா, லெபனான்,
- தின மலர்
டமாஸ்கஸ்: காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளையும், அவர்களை ஆதரிக்கும் ஈரானுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்தகட்டமாக சிரியா மீதும் தாக்குதலை நீட்டித்துள்ளது. சிரியாவில் எல்லைப்புறம் பதுங்கி இஸ்ரேல் எல்லையில் அடிக்கடி தாக்குதல்நடத்தி வரும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழுவை குறிவைத்து நேற்று சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி அதிர வைத்துள்ளது.
சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தியதாக சிரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழுவின் அலுவலகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மஸ்ஸே, குத்சாயா பகுதியில் 2 கட்டிடங்கள் தரைமட்டமானது. இஸ்ரேல் ஏவுகணை தாக்கியதில் 5 மாடி கட்டிடம் மண்ணோடு மண்ணாகி சரிந்தது. இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
The post காசா, லெபனான், ஈரானை தொடர்ந்து சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் appeared first on Dinakaran.