அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி: பிள்ளை சிரிக்கையில் சிரித்தது வையம், சிரித்தது வானமே என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். நம் குழந்தைகளின் மகிழ்ச்சிதான் நம்மை இயக்குகிறது. அத்தகைய குழந்தைகளின் கல்வியோடு சேர்த்து அவர்களின் தனித்திறமைகளையும் போற்றி வளர்ப்போம். குழந்தைகளைக் கொண்டாடுவோம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: உலகிலேயே சலிக்காத ஒன்று உண்டென்றால் அது மழலைகளின் குறும்புகளையும், விளையாட்டுகளையும் ரசித்துக் கொண்டிருப்பதுதான். குழந்தைகள்தான் மனிதர்களின் உலகங்கள். அவர்களைக் கொண்டாடுங்கள். உங்கள் வாழ்வில் கவலைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி மழையாய் கொட்டும்.
பாமக தலைவர் அன்புமணி: அன்பு, மகிழ்ச்சி, மனநிறைவு ஆகியவற்றால் உங்கள் வாழ்க்கை நிறைய வேண்டுமா? அதற்கு உங்கள் வீட்டில் ஒரு குழந்தை இருந்தால் போதுமானது. அன்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் அகிலம் அவர்கள். அவர்களின்றி உலகில் எதுவும் இல்லை. அவர்களை நாம் கொண்டாடுவோம். குழந்தைகளைப் போன்ற உள்ளங்களைப் பெற முயற்சி செய்வோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்காலம் என்பதை உணர்ந்து அவர்களின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருப்பதோடு, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை களையவும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
The post குழந்தைகளை கொண்டாடுவோம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.