அரசு டாக்டர் மீது தாக்குதல் எதிரொலி சென்னையில் 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் அமைப்பு: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை

சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை பெண் நோயாளி மகன் ஒருவன் கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம் அரசு மருத்துவமனைகளில் பணியில் உள்ள டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். அதை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் எல்லையில் அரசு மருத்துவமனைகளில் காவல் நிலையம் மற்றும் புறக்காவல்நிலையங்கள் இல்லாத எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, காந்திநகர் அரசு மருத்துவமனை, அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனை, அமைந்தகரை அரசு மகப்பேறு மருத்துவமனை, பெரியார் நகர் அரசு மருத்துவமனை என மொத்தம் 8 அரசு மருத்துவமனைகளில் போலீஸ் கமிஷனர் அருண் புறக்காவல் நிலையங்கள் அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதிதாக தொடங்கப்பட்ட 8 புறக்காவல் நிலையங்களும் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த புறக்காவல் நிலையங்களில் சுழற்சி முறையில் 2 காவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அதேபோல் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, ராயபுரம் அரசு ஆர்.எஸ்.எம் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையங்களில் சுழற்சி முறையில் ஒரு எஸ்ஐ, 2 காவலர்கள் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்ட பாதுகாப்பு முழு விவரங்கள்
மருத்துவமனை காவல் நிலையம் ஆய்வாளர் எஸ்ஐ காவலர்கள் மொத்தம் எண்ணிக்கை
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை 2 9 87 98
ஸ்டான்லி அரசு மருத்துவமனை 2 9 87 98
தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை 1 9 85 95
திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நலம் மற்றும் பொது நல மருத்துவமனை 1 9 85 95
எழும்பூர் அரசு மகப்பேர் மருத்துவமனை 1 8 85 94
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை காவல் நிலையம் 1 9 81 91
கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 1 9 80 90
அயனாவரம் அரசு மனநல காப்பகம் 1 9 85 95

The post அரசு டாக்டர் மீது தாக்குதல் எதிரொலி சென்னையில் 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் அமைப்பு: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: