இந்நிலையில் மதுரை திருநகர் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில், முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கஸ்தூரி கண்டனம் தெரிவித்த நீதிபதி, ‘‘கற்றவர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என கூறிக்கொள்ளும் கஸ்தூரி எப்படி, இப்படி பேச முடியும். தவறை உணர்ந்து அவர் மன்னிப்பு கேட்கவில்லை. தான் கூறியதை நியாயப்படுத்தவே கஸ்தூரி விரும்புவதாக அவரது விளக்கம் உள்ளது. அந்தப்புரத்துக்காக வந்தவர்கள் தெலுங்கு மக்கள் என குறிப்பிட்டு ஏன் கூறுகிறார்? அதற்கு என்ன அவசியம்? தெலுங்கு மக்கள் குறித்த அவரது பேச்சு தேவையற்றது. அவரது பேச்சு ஆபத்தை விளைவிக்கும்’’ என்றார். தொடர்ந்து வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே போலீசாரின் சம்மனை பெற மறுத்த கஸ்தூரி தலைமறைவாக உள்ளார். கஸ்தூரி தலைமறைவாக உள்ள நிலையில் முன்ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் நெருக்கடி அதிகரிக்கப்பட்டது. கஸ்தூரியை கைது செய்து விசாரிக்க வேண்டியிருப்பதாக ஐகோர்ட்டில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The post தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி முன்ஜாமின் மனு தள்ளுபடி: விரைவில் கைதாக வாய்ப்பு!! appeared first on Dinakaran.