×
Saravana Stores

கொடைக்கானல் வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் யானை சடலம்: வனத்துறையினர் விசாரணை


கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதியில் ஆண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை வெண்கலவயல் வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானையின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

யானை மின்வேலியில் சிக்கி பலியானதா அல்லது நோய் தாக்கி இறந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘இறந்த யானையின் உடலில் தந்தம் உள்ளது. அதனால் யானை தந்தத்திற்காக கொல்லப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனினும் யானையின் மர்ம மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.

The post கொடைக்கானல் வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் யானை சடலம்: வனத்துறையினர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kodaikanal forest ,Kodaikanal ,Dindigul District, Kodaikanal ,Bethupara bronze field ,
× RELATED கொடைக்கானல் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்