நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது வைத்திருந்த அலாதி அன்பும், இன்றைய குழந்தைகள் நாளையே எதிர்காலம் என்ற அவரின் கருத்துகளை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்.

“பிள்ளை சிரிக்கையில் சிரித்தது வையம்! சிரித்தது வானமே!” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

நம் குழந்தைகளின் மகிழ்ச்சிதான் நம்மை இயக்குகிறது. அத்தகைய குழந்தைகளின் கல்வியோடு சேர்த்து அவர்களின் தனித்திறமைகளையும் போற்றி வளர்ப்போம். குழந்தைகளைக் கொண்டாடுவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post நாளைய உலகின் சிற்பிகளாகிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள்: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.

Related Stories: