அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

அருப்புக்கோட்டை, நவ.14: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, திட்ட பணிகளுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிழக்குத் தெருவில் எம்எல்ஏ நிதியில் ரூ.17 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்க கட்டிடம், சுக்கில் நத்தத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா, கனிமவள நிதியில் ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், குருந்தமடத்தில் ஆதிதிராவிடர் நலவாரிய நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதிதிட்டம் மற்றும் ஒன்றிய பொது நிதியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், டி.மீனாட்சிபுரத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா, ஆமணக்கு நத்தத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்ட அடிக்கல் நாட்டுவிழா, 15வது நிதி குழு மானிய திட்டத்தில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் புதிய பைப்லைன் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, திட்ட பணிகளுக்கு அடிக்கல்நாட்டினார். அதன்பின் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘50 வருடமாக நான் உங்களோடுதான் இருக்கிறேன். உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி. எனக்கு ஆயுள் இருக்கும் வரை உங்களுக்காக வேலை செய்து கொண்டிருப்பேன். என்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுப்பேன். உங்கள் வீட்டுபிள்ளை நான். நமக்காக உழைக்க கூடியவராக நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். எனக்கும் முதல்வருக்கும் நீங்கள் உறுதுணையாக எப்போதும் இருக்க வேண்டும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகுமாரி, தாசில்தார் செந்தில்வேல், ஒன்றிய செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் பாலச்சந்தர், ஊராட்சி மன்ற தலைவர் நாகஜோதி ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கோவிந்தசாமிநாதன், சீனிவாசன், அழகுசக்தி, வாழவந்த ராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்குமார், திமுக பிரமுகர் காந்திநகர் சீனிவாச பெருமாள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் அழகு ராமானுஜம், தங்கமணி, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் வெங்கட்ராமன், ஜேசிபி சிவா, திரவியம், பாலவநத்தம் கன்னியப்பன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் தாமோ.வெங்கடேஷ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கணேசன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், பாலையம்பட்டி கிளைச்செயலாளர் இளம்பாரதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: