×

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா

செஞ்சுரியன்: இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி, செஞ்சுரியன் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்து வீசியது. துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன், 2வது பந்திலேயே டக்அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். முதல் விக்கெட் வீழ்ந்தபோதும், மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் சர்மாவும், அவருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மாவும் அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் நேற்றைய போட்டியில், 24 பந்துகளை எதிர்கொண்டு, 5 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 50 ரன் விளாசி அவுட் ஆனார். பின் வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், 1 ரன்னில் வீழ்ந்தார்.

கடைசி வரை களத்தில் நின்ற திலக் வர்மா, 56 பந்துகளில் அதிரடியாக விளையாடி 107 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது. 220 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய தென் ஆப்ரிக்க அணியில் ஹென்ரிச் 41 ரன்(22 பந்து) எடுத்து அவுட் ஆனார். இறுதியில் அதிரடி காட்டிய மார்கோ 17 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அவுட் ஆகி அதிர்ச்சி தந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன் மட்டுமே எடுத்து, 11 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்திய பேட்டிங் கில் அதிரடி காட்டிய திலக் வர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,South Africa ,Centurion ,T20 ,Centurian ,Sanju Samson ,Dinakaran ,
× RELATED தெ. ஆ.வுடன் முதல் டெஸ்ட்: தோல்விப் பாதையில் பாக்.