×

யு மும்பா அணியுடன் இன்று ‘வாழ்வா சாவா’ போட்டியில் தமிழ் தலைவாஸ் மோதல்: புரோ கபடியில் அசத்தப் போவது யார்?

நொய்டா: நொய்டா நகரில் இன்று நடக்கும் முக்கியத்துவம் வாய்ந்த புரோ கபடி போட்டியில், யு மும்பா அணியுடன், தமிழ் தலைவாஸ் அணி மோதுகிறது. ஐதராபாத்தில் தொடங்கிய புரோ கபடி போட்டியின் 11வது தொடர் நொய்டாவில் நடந்து வருகிறது. இதில் விளையாடி வரும் தமிழ் தலைவாஸ் அணி ஆரம்பத்தில் வெற்றியுடன் தொடங்கியது. புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களில் மாறி, மாறி இடம் பெற்றிருந்தது. ஆனால் அதன் பின் நடந்த அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்ததால், தமிழ் தலைவாஸ் தடுமாற்றத்தில் உள்ளது.

இதையடுத்து, வெற்றி பெற்றால்தான் தேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இன்று யு மும்பாவை, தலைவாஸ் எதிர்கொள்கிறது. தலைவாஸ் அணி இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றது. தவிர, ஒரு ஆட்டத்தை சமனிலும், 4 ஆட்டங்களை தோல்வியிலும் முடித்துள்ளது. அதனால் 21 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. மாறாக, யு மும்பா அணி, தான் விளையாடிய 9 ஆட்டங்களில் 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு சமன் என மொத்தம் 29 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெல்வதன் மூலம் மும்பா அணி முதல் இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பும் உள்ளது. அதே சமயம், தலைவாஸ் அணி, இனி ஆடும் போட்டிகளில் வென்றால்தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைக்க முடியும். அதனால் இரு அணிகளும் இன்று வெற்றிக்காக மல்லுக் கட்டும்.

* அணியில் தமிழ்நாட்டு வீரர்கள்:
தமிழ் தலைவாஸ்: சந்திரன் ரஞ்சித், அபிஷேக் மனோகரன், மாசானமுத்து
யு மும்பா: சதீஷ் கண்ணன், எம்.தனசேகர், எம்.கோகுலகண்ணன், முகிலன் சண்முகம், ஸ்டூவர்ட் சிங்

* புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் – யு மும்பா அணிகள், இதுவரை 11 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் 7 ஆட்டங்களில் மும்பாவும், 3 ஆட்டங்களில் தலைவாசும் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.

The post யு மும்பா அணியுடன் இன்று ‘வாழ்வா சாவா’ போட்டியில் தமிழ் தலைவாஸ் மோதல்: புரோ கபடியில் அசத்தப் போவது யார்? appeared first on Dinakaran.

Tags : Tamil Thalaivas ,U Mumba ,Jiiva Chava ,Pro Kabaddi ,Noida ,Pro ,Kabaddi ,Hyderabad ,Dinakaran ,
× RELATED புரோ கபடி லீக் தொடரில் பிளே ஆப்...