×

ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

ஊட்டி, நவ. 13: வக்பு வாரிய சொத்துக்களை ஒன்றிய அரசு அபகரிக்க முயற்சிப்பதாக கூறி, அதனை கண்டித்து ஊட்டியில் தவ்ஹித் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்பு வாரிய திருத்தச்சட்டம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருவதாக சில இஸ்லாமிய அமைப்புகளுக்கு குற்றம் சாட்டி வருகிறது. வக்பு வாரியத்திற்கான அதிகாரங்களை முற்றிலும் அபகரித்து, மாவட்ட கலெக்டருக்கு அதிகாரங்களை வழங்குது உட்பட பல்வேறு சட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில், இதனை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹித் ஜாமஅத் அமைப்பு சார்பில் ஊட்டி ஏடிசி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, நீலகிரி மாவட்ட தலைவர் சபியுதீன் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் கோவை ரஹீம் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ஒன்றிய பாஜ அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில், மாவட்ட செயலாளர் உமர் நன்றி கூறினார்.

The post ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Union BJP government ,Tawheed Jamaat ,union government ,Waqf Board ,Dinakaran ,
× RELATED அகலம் குறைத்து அமைக்கப்பட்டதால்...