இந்த குடிநீர் தொட்டியானது, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இதனால், நாளடைவில் தொட்டி பழுதாகி சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் தொட்டி எப்போது இடிந்துவிழுமோ என்ற அச்சத்துடன் அப்பகுதி மக்கள் வாழ்ந்த வருகின்றனர். மேலும், தொட்டி இடியும் நிலையில் இருப்பதால் தொட்டியை சுத்தம் செய்யும் பணியாளர்களும் தொட்டியை சுத்தம் செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். இதனால், மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தொட்டி இடிந்து விழுந்தால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இருப்பதால் பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு அதே பகுதியில் புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி பெரும் அசம்பாவிதம் நேரிடுவதற்கு முன் பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post லத்தூர் ஒன்றியம் கல்பட்டு கிராமத்தில் இடிந்துவிழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி appeared first on Dinakaran.