ஸ்ரீபெரும்புதூர் – செங்கல்பட்டு பிரதான சாலையில் எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில் சென்றபின் கேட் திறக்கப்படும்போது, எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விதி மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும். மேலும், போக்குவரத்து போலீசார் நியமிக்கவும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை கடந்துதான் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பிரதான சாலையாகவும் அமைந்துள்ளது. இங்கு, குறிப்பாக ஸ்ரீ பெருமந்தூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அதேபோல். பொருட்கள் ஏற்றிச்செல்லும் கனரக லாரிகள் என அனைத்து வாகனங்களுமே இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்வது வழக்கம். சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில்வே கேட் ரயில் வரும்போது எல்லாம் மூடப்படுகிறது. ரயில் வெகு தூரத்தில் வரும்போது பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்க முயற்சி செய்கின்றன. மேலும், இதன் அருகே உள்ள திருக்கச்சூர், பேரமனூர், கொளத்தூர், ஆப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில், இங்கிருந்து வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதேபோல் வேலைக்கு செல்லும் நபர்கள் என அனைவரும் ரயில்வே கேட் திறக்கும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சூழலும் ஏற்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்கு செல்லும் வாகனங்கள் ஒருசில வாகனங்கள் செங்கல்பட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பிரதான சாலையில் எதிர் திசையில் வருகிறது. இதன் காரணமாகவே இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலாக எப்போதும் காணப்படுகிறது. அதேபோல இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேலைகளில் அதிக வாகனங்கள் செல்லும் நிலை உள்ள நிலையில் போக்குவரத்து போலீசார் ஒருவர் கூட பணியில் ஈடுபடவில்லை. எனவே, போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டால் இது போல் எதிர் திசையில் வர மாட்டார்கள். எனவும் அதே போல் எதிர் திசையில் வரும் வாகனங்கள் மீதும் விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுனர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எடுத்துள்ளது.

The post ஸ்ரீபெரும்புதூர் – செங்கல்பட்டு பிரதான சாலையில் எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: